உடல் எடை குறைக்க இந்த ஜூஸ்சை குடிங்க கண்டிப்பா நல்ல ரிசல்ட் தெரியும்/Juice Recipes for Reduce Weight

#fatcutterdrink #WeightLossDrink #fatcutterdrink #weightlossdrink

You can buy this cooking vessel here:
https://www.amazon.in/shop/erodeammachi

for business inquiries contact
erodeammachisamayal@gmail.com

also follow us to :
https://www.facebook.com/erodeammachi/
helo app : # erode ammachi samayal
instagram :erodeammachisamayalofficial/

முள்ளங்கி சாறு பயன்கள்

முள்ளங்கியை 50 கிராம் முதல் 100 கிராம் வரையில் எடுத்துச் சாறு பிழிந்து குடித்து வர பல நோய்களுக்கு நல்ல குணமளிக்கும்

முள்ளங்கி சாற்றோடு சர்க்கரைச் சேர்த்து உள்ளுக்கு கொடுத்து வர குத்திருமல், பல வித ஈரல் நோய்கள் குணமடையும்.

முள்ளங்கியைச் சாறு பிழிந்து குடித்து வர சிறுநீர் தாராளமாய் இறங்கும்.

முள்ளங்கி சாறை காலை, மாலை அருந்துவதால் மூல நோய்கள் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்துச் சாப்பிட இருமல், நெஞ்சக சார்ந்த கோளாறுகள், இதய வலி, வயிறு உப்புசம், தொண்டைப் புண், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும்.

கோடை காலத்தில் முள்ளங்கிச் சாறை சிறிது சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர உடல் குளிர்ச்சி பெறும்.

ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

முள்ளங்கி விதைகள் வயிறு நிரம்ப இருப்பது போன்ற நிலையிலும் நெஞ்சைக் கரித்துக் கொண்டு, புளிப்புடன் நாம் உண்ணும் உணவு நீண்ட நேரத்திற்குப் பிறகு செரிமானம் ஆகாமல் வயிற்றுப் போக்கை உண்டாக்குகிற போதும், நெஞ்சுக் கோழை அதிகரித்து இருமல், மூச்சிரைப்பு ஏற்படுகிற போதும் சிறந்த பலன் தருகிறது.

முள்ளங்கி விதையை நன்றாக இடித்து காடி சேர்த்து குழைத்துப் பசையாக்கி, வெண் புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும். தினம் இவ்வாறு செய்து வருவது நல்லது.
இதையே படர் தாமரை, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீது பூசி வர குணம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *